உணர்வுள்ள உறவுகள் அமைப்பினரால் மட்/ஆனைப்பந்தி மகளிர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
மட்/ஆனைப்பந்தி மகளிர் பாடசாலையின் அதிபரின் அன்பான கோரிக்கையினை ஏற்று உணர்வுள்ள உறவுகள் அமைப்பினர்.மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை மேம்படுத்தும் நோக்கில் கற்றல் உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் பாடசாலையில் நடைபெற்றது.
இதன் போது பெறுமதியான கற்றல் உபகரணங்கள் பாடசாலையின் அதிபரிடம் கையளிக்கப்பட்டன.
நிகழ்வில் உணர்வுள்ள உறவுகள் அமைப்பின் செயலாளர் மற்றும் களச்செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.