பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்ற வளாகத்திலிலுந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.அவரை நீதிமன்ற வளாகத்திலிருந்து சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றும்போது, அவ்வளாகத்திலிருந்த பிக்குமார்கள் சிலர், அருகிலிருந்த அரச மரத்துக்கருகில் சென்று, பிரித் (பௌத்தமத ஸ்தோத்திரங்கள்) ஓதி, ஞானசார தேரவை வழியனுப்பி வைத்தனர்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கடூழியச் சிறைத் தண்டனை விதித்து, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் சற்று நேரத்துக்கு முன்னர் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி, சந்தியா எக்னெலிகொட வை, ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவதூறாக பேசி, மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில், ஞானசாரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் (14) வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீதவான் உதேஸ் ரணதுங்க மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.