மனதாலும்,சமூகத்தாலும் ஒண்றித்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மட்டக்களப்பு மாவட்ட பொது மக்களை கேட்டுக்கொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முன்தினம்(30) ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 93பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தோரும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சீ.ஆர். பரிசோதனைகளின் பிரகாரம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதில் ஆண்கள் 60 பேரும் பெண்கள் 33பேரும் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக அண்மைக்காலங்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொது மக்கள் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய வீடுகளில் இருந்து வெளி நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, முகக்கவசங்களை முறையாக அணிந்து,ஒவ்வொருவரும் தங்களை தாங்களே பாதுக்காத்தும்,மனதாலும்,சமூகத்