அம்பாறை மாவட்டத்தின் காரைதீவுப் பிரதேசத்திலுள்ள மாளிகைக்காடு காலைநேர மீன்மார்க்கட்டுக்கு நேற்றுஅதிகாலை மன்னரிலிருந்துஇருவாகனங்களில் மீன்கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த இருவாரங்களுக்கு முன்பு காரைதீவில் இடம்பெற்ற கொரோனா செயலணிக்கூட்டத்தில் வெளிமாவட்ட மீன்களைக்கொண்டுவருவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
அதனையும் மீறி இந்த மீன்களையும் இறால்களையும் மன்னாரிலிருந்து கொண்டுவந்தவர்கள் யார்? அவர்களை ஏன் இன்னும் கைதுசெய்யவில்லையென மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
அதேபோன்று கல்முனைப்பகுதி பேக்கரிஉணவுப்பொருட்களை எவ்வ்pத அனுமதியுமின்றி காரைதீவுப்பகுதிக்குள் உரிய பாதுகாப்புநடைமுறையின்றி விற்பனை செய்த இருவருக்கும் நடவடிக்கைஎடுக்கப்படவில்லையெனவு ம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சுகாதாரப்பகுதியின் நடவடிக்கை எடுக்கவில்லையென மக்கள் தவிசாளரிடம் புகார்தெரிவித்தனர். அதனையடுத்துஅவர் பொலிசாரிடம் அறிவித்ததையடுத்து அவர்கள் மேலதிக நடவடிக்கைக்காக கொண்டுசென்றதாகத் தெரிகிறது.
இதேவேளை முடக்கப்பட்டுள்ள புத்தளம்பிரதேசத்திலிருந்து இருவர் மாளிகைக்காட்டுக்கிராமத்திற்கு நேற்று வந்திருப்பதனை மக்கள் பிரதேசசெயலரிடம் தெரிவித்ததையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரதேசசெயலரின் உத்தரவின்படி பிரதேசசுகாதார வைத்தியஅதிகாரிபணிமனை எடுத்த நடவடிக்கையின்பேரில் அந்தஇருவரும் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.