தற்போது அரசாங்க வைத்தியசாலைகளில் அத்தியாவசிய சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மயக்க மருந்து பற்றாக்குறையால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, தற்போது புற்றுநோய் மற்றும் விபத்துகள் தொடர்பான அவசர அறுவை சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.