தற்போது உயர்வாக காணப்படும் மரக்கறி வகைகளின் விலை அடுத்த இரண்டு நாட்களில் குறைவடையும் என்று ஹிக்கர் கோபக்கடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் இக்காலப்பகுதியில் மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பதுண்டு. தற்போது சந்தைக்கு பயிரிடப்பட்ட அதிகமான மரக்கறிகள் அறுவடை செய்து பெறப்படுவதனால்; மரக்கறிகளின் விலை குறைவடையும் .
காலநிலை மாற்றம் காரணமாக சில மாதங்களாக மரக்கறி வகைகளின் விலை அதிகரித்தன.
40 ரூபா வரி அறவிடுவதனால் இறக்குமதி செய்யப்பட கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை ஓரளவு அதிகரித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் அதிகளவில் அறுவடை செய்யப்படுவதனால் அடுத்த மாதம் முதல் விலை குறைவடையும். இதேவேளை முட்டையின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.