மரபுக் கவிதையின் முன்னோடி  கலாபூஷணம் பொன்.சிவானந்தன் காலமானார்!

கிழக்கின் மரபுக் கவிதையின் முன்னோடி  காரைதீவைச் சேர்ந்த கலாபூஷணம் கவிச்செல்வர் பொன்.சிவானந்தன்
(ஓய்வு நிலை அதிபர்)
தனது 83 வது வயதில் நேற்று  (24) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார்.
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (26) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் இடம்பெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
அன்னார் இலக்கிய உலகில் 38 வருடகாலம் இலங்கியவர்.1996 இல்  “சிவானந்தன் கவிதைகள்” என்ற கவிதைத் தொகுதியை எழுதி வெளியிட்டவர். இவர் மதுரகவிமணி கவிமுத்து என்ற பட்டங்களையும் பெற்றவராவார்.
 
மண்டூரைப் பிறப்பிடமாகவும் காரைதீவை வாழ்விடமாகவும் கொண்ட பொன் சிவானந்தன்  காரைதீவு பிரதேச செயலக சாஹித்ய விழாவில் விபுலமாமணி பட்டத்தையும் பெற்றவராவார்.

Related posts