மருதமுனையில் 6 இலட்சம் ரூபா செலவில் முன்பள்ளி பாடசாலை கட்டிடம் திறந்து வைப்பு.

(றாசிக் நபாயிஸ், ஏ.எல்.எம்.ஷினாஸ்)

சிறுவர் மகளிர் அபிவிருத்தி அமைச்சின் சிறுவர் செயலகம் தற்போது முன்னெடுத்துள்ள முன்பள்ளி அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலகத்தின் கீழுள்ள முன்பள்ளிப் பாடசாலைகள்  புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வேலைத் திட்டத்தின் கீழ் ஆறு இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட மருதமுனை  எம்.எஸ்.சி முன்பள்ளி பாலர் பாடசாலையின் புதிய கட்டடம்  திறந்து வைக்கப்பட்டது.

அனர்த்த நிவாரண அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.அஹமட் நபாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாடசாலையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

முதல் கட்டமாக பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக சுமார் 12 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. ஒரு பாடசாலைக்கு 6 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் சுமார் 72 இலட்சம் ரூபாய் செலவில் இந்த முன்பள்ளி பாலர் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்வில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எல்.சிபாயா, முன்பள்ளி சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.சம்றினா, சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.ஹஸ்பியா, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.ஐ.பஜிமிலா, பொதுஜன பெரமுன கட்சியின் மருதமுனை செயற்பாட்டாளர் இஸட்.ஏ.நௌசாத், தலைமை ஆசிரியர் இஸட்.ஏ.நஸ்ரின் ஜஹான், ஆசிரியை பரினா பாடசாலை நிருவாக உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின்போது பிரதம அதிதி அவர்களினால் பாடசாலையின் பெயர் பொறிக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டு சிறுவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் இனிப்புப் பண்டங்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வின் இறுதியில் பாடசாலை வளாகத்தில் அதிமேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய அதிதிகளினால் பழ மரக்கன்றும் நாட்டி வைக்கப்பட்டது.  

 
 

Related posts