வடமேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் உடனடியாக அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த ஊரடங்கு மறு அறிவித்தல் வரையில் அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் குளியாப்பிட்டிய உள்ளிட்ட சில இடங்களில் அறிவிக்கப்பட்டிருந்த இந்த ஊரடங்கு தற்பொழுது வட மேல் மாகாணம் முழுவதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை மக்களிடையே பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதேவேளை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்காதபட்சத்தில் சிங்கள மக்கள் கிளர்ந்தெழ நேரிடும் என்று மல்வத்து பீடம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.