அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய மல்வத்தைப் பிரதேசத்தில் சமகால கொவிட் தாக்கத்தினாலும் பயணத்தடையினாலும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தையிழந்த ஒரு தொகுதி விதவைகளுக்கு உலருணவு நிவாரணம் நேற்று வழங்கப்பட்டது.
தொடரும் பயணத்தடை மற்றும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட தாயகஉறவுகளின் பசியைப்போக்க தனது பிறந்த நாள்பரிசாக 10லட்சருபாவை வழங்கியுள்ளார் ஒரு பரோபகாரி. அவர்தான் இலங்கையைச்சேர்ந்த கனடாவில் வாழ்ந்துவரும் மனோகரன் சுப்பிரமணியம் என்பார்.
குறிப்பாக அவர்வழங்கிய 1மில்லியன் ருபா(10லட்சருபா) நிதியைஅம்பாறை மாவட்டத்தைச்சேர்ந்த 500குடும்பங்களுக்கு தலா 2000ருபா வீதம் 500 உலருணவு நிவாரணப்பொதிகளை வழங்கிஉதவுமாறு மாவட்டத்தின் பிரபல சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
நிகழ்வில் சமுகசெயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா கலந்துகொண்டனர்.அங்குள்ள இளைஞர்கள் ஆர்வத்துடன் இப்பணிக்கு ஒத்துழைத்தனர்.