காத்தாங்குடி பிரதேசத்திற்கு உட்பட்ட மட்டக்களப்பு தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக கடந்த 6 ஆம் திகதி இரவு மாட்டுடன் மோதி விபத்தில் படுகாயமடைந்தவர் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய சிவசுப்பிரமணியம் சிவராம் என்பவர் தனது மட்டக்களப்பிலுள்ள வீட்டிலிருந்து தனது சொந்தவேலை காரணமாக செல்லும்போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் போது படுகாயமடைந்தவரை மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் அவசரசிகிச்சைப்பிரிவிலே அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.என பொலீசாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு நீதவான்நீதிமன்ற பதில்நீதவான் அவர்களுடைய உத்தரவுக்கு அமைவாக காத்தான்குடி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுமணிமாறன் சடலத்தைப் பார்வையிட்டதுடன் உடல் கூற்று பரிசோதனையினைச் செய்யுமாறு பொலிஸாரை வேண்டியுள்ளார் மேலதிய விசாரணையினை காத்தான்குடிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.