மாணவர்களுக்கு தரம் 5 புலமைப் பரிசில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மாணவர்களிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கோடு தேசிய சேமிப்பு வங்கியின் மட்டக்களப்பு கிளையினால் 2017 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (20) அரசடி மகாஜனக் கல்லூரி மண்டகத்தில் நடைபெற்றது.
தேசிய சேமிப்பு வங்கியின் மட்டக்களப்பு கிளையின் முகாமையாளர் எஸ்.வி. சுவேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுள் 2017 ஒக்டோபர் 1 ஆம் திகதியன்று ரூபாய் 3000 சிறுவர் சேமிப்புக் கணக்கில் வைத்திருந்த 69 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு சான்றிதழ், சேமிப்பு உண்டியல்கள் மற்றும் பாடசாலை புத்தப் பைகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்;.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மா.உதயகுமார், தேசிய சேமிப்பு வங்கியின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் கே. கமலநாதன், தேசிய சேமிப்பு வங்கியின் மட்டக்களப்பு கிளையின் உதவி முகாமையாளர் திருமதி எஸ்.குமுணதாசன், மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) திருமதி தேவரஞ்சனி உதயகரன், மட்டக்களப்பு பிரதேச தபால் அத்தியட்சகர் எஸ்.ஜெகன் அகியோர் கலந்து கொண்டு மாணவாகளுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
????????????????????????????????????
????????????????????????????????????
?

Related posts