கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் திருக்கோவில் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பாரம்பரிய கூத்து கலை பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.
குறித்த கூத்துப் பட்டறையும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலகஒன்று கூடல் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது .
நிகழ்வில் திருக்கோவில் உதவிப்பிரதேச செயலாளர் க .சதிசேகரன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஆ.அனோஜா, திருக்கோவில் பிரதேச கிராம சேவை நிருவாக உத்தியோத்தர்.எஸ்..பரிமளவாணி ,மற்றும் கலாச்சார உத்தியோத்தர்களான ஏ.எச்.ஆர்.அம்ஜத், திருமதி.சர்மிலா பிரசாத், திருமதி. நிறோஜினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூத்துப்பட்டறை வளவாளர்களான திருமதி.சிவகாமிதேவி மற்றும் விஜயாலயன் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களும் மாணவர்களுக்கு வழங்கிவைத்தனர்.
பட்டறையில் திருக்கோவில் கோட்டத்திற்குட்பட்ட க.பொத. சா.த உ.த மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு பாரம்பரிய கூத்து கலை பயிற்சிப்பட்டறை
( வி.ரிசகாதேவராஜா)