மாமரங்களை கத்தரித்து பயிற்றுவித்தல் தொடர்பான ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு மண்டூரில்

 
 
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் ரீ.மேகராசா அவர்களின் தலைமையில் றாணமடு விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள மாலையர்கட்டு கிராமத்தில் மாமரங்களை கத்தரித்தலும் பயிற்றுவித்தலும் பசளையிடலும் தொடர்பான ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில் மண்டூர் கமநல கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ஜெயக்காந்தன் வலயம் மத்தி உதவி விவசாய பணிப்பாளர் திரு.சித்திரவேல் பாடவிதான உத்தியோகத்தர் திருமதி. ருபேஷினி கிராம உத்தியோகத்தர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் விவசாய அமைப்புக்கள் மற்றும் பழமரச் செய்கையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
 
இதன்போது மாமரங்களை நடுகை செய்வது முதல் அதனை எவ்வாறு கத்தரித்து பயிற்றுவித்து பழக்கப்படுத்தலாம், அதிக விளைச்சலைப் பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பசளையிடல் முறைகள் மாவிலைத்தத்திகளை கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள் மற்றும் ரொம்.ஈ.ஜே.சீ போன்ற புதிய வகை மாமரங்களின் காய்களுக்கு எவ்வாறு உறையிட்டு தரமான உற்பத்தியை பெறலாம் போன்ற விடயங்கள் செய்முறை ரீதியாக விவசாய போதனாசிரியர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்களால் தெளிவூட்டபட்டன.

Related posts