கல்முனைப்பிராந்தியத்தில் மீண்டும் கொரோனா திவீரமாகிவருகிறது. தென்கிழக்குபல்கலைக்கழகத்தில் 37மாணவருக்கும் ,பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் 11பேருக்கும் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்கள் சுகாதாரவழிமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றி அவதானமாகவிருக்கவேண்டும்
என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:
கடந்த 3 தினங்களாக கல்முனை பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 37 மாணவர்கள் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளான மாணவர்கள் அனைவரும் அட்டாளைச்சேனை கோவிட் இடைநிலை முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர்கள்
10 தொடக்கம் 20 வீதம் வரையான கோவிட் தொற்று அதிகரித்து காணப்படுகின்றது. இதனடிப்படையில்
எமது கல்முனை பிராந்தியத்தில் 3 தினங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 37 மாணவர்கள் கோவிட் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், நேற்று(22) மேற்கொள்ளப்பட்ட அன்டீஜன் கோவிட் பரிசோதனையின் போது பொத்துவில் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோர் மொனராகலை மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் அனைவரும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவவர்கள் என்பதும் குறிப்பிட்டுச்சொல்லக்கூடியது.
எனவே, தடுப்பூசிகளை பெற்றுவிட்டோம் என்பதற்காக சுகாதாரவிதிமுறைகளை கடைப்பிடிக்க தவறவேண்டாம். அவதானமாக இருங்கள். தவறினால் முன்னயைகாலங்களைப்போல் நாம் தடுப்பு முறைகளை மேலும் திவீரமாக்கவேண்டிவரும் என்றார்.