ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கிழ் 100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாநகர சபையினை அழகு மிகுந்த நகரமாக மாற்றும் செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக மட்டக்களப்பு கொத்துக்குளத்து மாரியம்மன் ஊறணி சந்தியினை அழகு படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பத்து வைக்கப்பட்டது.
இன்நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இனைத்தலைவரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்துவைத்தார்.
கிழக்கு மாகாண நகர அபிவிருத்தி அதிகாரசபையின் 17.38 மில்லியன் நிதி பங்களிப்புடன் மாநகர சபையின் பங்களிப்புடன் பிரதேச செயலகத்தின் ஒத்துளைப்புடனும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு மாநகர சபைக்கு பராமரிப்பிற்காக கையளிக்கப்படவுள்ளது.
பிரதம விருந்தினரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் உரையாற்றுகையில் அனைத்து மக்களும் சுபிட்சமாக வாழவேண்டும் எனும் ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கிழ் 100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்திற்கு அமைவாக இப்பிரதேச மக்கள் ரம்மியமான இயற்கையின் அழகினை அனுபவிக்கவேண்டும் மட்டக்களப்பு மீன் பாடும் தேனாடு இயற்கை எழில்கொஞ்சு நகரமாக மாற்றியமைப்பதற்கு எமது அரசாங்கம் ஒத்துளைப்பு வழங்புகும் என்றும் தற்போது பாரிய அபிவிருத்தியினை இந்த கொரோன காலத்திலும் முன்னெடுத்து வருகின்றோம் தற்போது கொரோன நோயினை 60-70 வீதம் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது போன்று எதிர் காலத்தில் பாரிய அபிவிருத்தியினையும் மக்களுக்காக முன்னெடுப்போம் எனகுறிப்பிட்டார்.
ஆரம்பவிழாவிற்கு கிழக்கு மாகாண நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் ஜெகத் லியனக்கே மாநகர ஆணையாளர் மாணிக்கவாசகர் தயாபரன் மாவட்ட செயலகத்தின் திட்டப்பணிப்பாளர் புண்னியமூர்த்தி சசிகலா பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் மின்சார சபையின் மாவட்ட பொறியலாளர்; தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் திணைக்கள தலைவர்களும் கலந்துகொண்டனர்.