புலிபாய்ந்த கல்லுப் பிரதேச மக்கள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்ஜீ. ஸ்ரீநேசனிடம் கோரிக்கை
குற்றச் செயல்கள் அதிகரிப்பதால் அதனைத் கட்டுப்படத்தவதற்கும்¸ தடுப்பதற்கும் ‘மூக்கர்ர கல்லுச் சந்தியில்’ பொலீஸ் சாவடி ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.ஸ்ரீநேசனிடம் கோரிக்கை விடுத்தனர்
பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.ஸ்ரீநேசனின் ‘மக்கள் சந்திப்பு’ முறுத்தானை கிராமத்தில் அப்பகுதயின் பிரமுகர் சண்முகநாதனினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதற்கு சமூகம் கொடத்திருந்த அப்பகுதியின் மக்களே இவ்வாறு கண்ணீரும் கம்பலையுமாக தெரிவித்தனர்
இப்பகுதியின் தமிழத் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த பிரமுகர் சண்முகநாதன் கருத்துத் தெரிவிக்கையில். இப்பகுதி மந்தை வளர்ப்பு¸ நெற்செய்கை¸ வனவளம் ¸ நீர்வளம்; ஆகியவைகளுக்கு பிரபல்யமானது. இந்த வளங்களை சண்டித்தனத்தின் மூலம் ஒரு சிலர் சூறையாடுகின்றனர். உத்தரவுப் பத்திரமின்றி மணல் ஏற்றுதல்¸ களவாக மரம் ஏற்றுதல்¸ களவாக மாடு¸ ஆடு அகியவைகளை கடத்துதல் எனபன நடைபெறுகின்றன ஆடு¸ மாடு கடத்தல் பட்டப்பகலிலும் நடைபெறுகிறது. இதற்கு பொலீஸாரும் அப்பகுதியிலுள்ள கிராமசேவகரொருவரும் துணையாக நிற்கின்றனர். அதற்கு அப்பால் அரசியல் பல முள்ளவர்களும் இருப்பதாக தெரிய வருகிறது.இதைவிட ஆற்றில் குளிககு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வருவார்கள்.அவர்கள்காட்டும் கூத்துக்கள் வேறு இவைகளை ஒரு பொலீஸ்சாவடியொன்றை அமைத்தால்குறைக்கலாம் அல்லது கட:ப்படத்தலாம் என்ற அபிப்பிராயம் மக்கள் மத்தியில் இருக்கிறது.
இவைகளுக்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் கூறுகையில்¸ மக்கள் எல்லொரும் ஒன்று திரண்ட இவைகளுக்கு எதிராக செயற்பட வேண்டும் என்றார்.இதனை சிஸே;ட பிரதிப் பொலீஸ் மா அதிபர் யாகொட ஆராய்ச்சியின் நட்வடிக்கைக்காக தான் முன்னெடுப்பதாக கூறினார்.