கொரோனா பேரிடர் காரணமாக மூடப்பட்டிருந்த நாட்டிலுள்ள அறநெறிப்பாடசாலைகளை எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் சுகாதாரநெறிமுறைக்கிணங்க மீளத்திறக்குமாறு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் அறிவித்துள்ளார்.
அறநெறிப்பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு வசதியாக பெற்றோர் அறநெறிப்பாடசாலை நிருவாகத்தினர் பொறுப்பான உத்தியோகத்தர்கள் ஒத்துழைப்புவழங்கவேண்டும்.
உரிய சுகாதர நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும். எனவே இதுவிடயத்தில் சகலரும் கவனம்செலுத்துமாறும் பணிப்பாளர் உமாமகேஸ்வரன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.