மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுப்போட்டியில் நிவேதிதா இல்லம் 550 புள்ளிகளை பெற்று இவ்வாண்டுக்கான சம்பியன்

கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுப்போட்டியில் நிவேதிதா இல்லம் 550 புள்ளிகளை பெற்று இவ்வாண்டுக்கான சம்பியன் கிண்ணத்தை தட்டிக்கொண்டது.
 

மட்டக்களப்பு கல்லடி விவேகானந்த மகளிர் கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை(24)பிற்பகல் 2.25 மணியளவில் கல்லடி  சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் அதிபர் திருமதி.நவகீதா தர்மசீலன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன்(காணி)கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் பிரிவின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் கே.ஹரிஹரராஜும்,சிறப்பு அதிதிகளாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார், மட்டக்களப்பு கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் எஸ்.ஜெயராஜ்,முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர்களான ஏ.சுகுமார்,ரீ.அருட்பிரகாசம்,முன்னாள் அதிபர் திருமதி.திலகவதி ஹரிதாஸ் ஆகியோர்களும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

முதலில் அதிதிகளை வரவேற்றல்,தேசியக்கொடி,பாடசாலைக்கொடி,வலயக்கொடி,இல்லக்கொடி,ஏற்றப்பட்டு தேசியகிகீதம் இசைக்கப்பட்டது.அதன்பின்னர் ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல், அணிநடை, உடற்பயிற்சி கண்காட்சி,  மாறுவேடப் போட்டி, மைதான விளையாட்டுகள், அதிதிகள் உரை, பரிசு வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில் 550 புள்ளிகளைப் பெற்று முதலாவது இடத்தினை நிவேதிதா(சிவப்பு) இல்லம் இவ்வாண்டுக்கான சம்பியன் கிண்ணத்தை தட்டிக்கொண்டது.மேலும் 481புள்ளிகளைப் பெற்று  இரண்டாவது இடத்தினை சாரதா(பச்சை) இல்லமும்,291புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தினை அவபாமியா(நீலம்) இல்லமும் பெற்றுக்கொண்டதுடன் இல்லங்கள் சார்பாக போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை தட்டிக்கொண்டவர்களுக்கும்,போட்டிகளில் பங்கு பற்றியவர்களுக்கும் கிண்ணங்களும்,பரிசுகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது. 

Related posts