இலங்கையில் கொரோனா நெருக்கடிநிலையையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பணிகள் பல்வேறுகோணங்களில் அரசாங்கத்தினாலும் பல்வேறு அமைப்புகளாலும் தனவந்தர்களாலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் வழமையான உலருணவு நிவாரணங்களை வழங்கிவந்த ஒரு குழுவினர் வித்தியாசமான நிவாரணப்பணியை முன்னெடுத்துள்ளமை நாமறிந்த விடையமாகும்.
பொத்துவில் பிரதேத்தில் குறிப்பாக ஊறணி மணற்சேனை போன்ற கிராமங்களில் செய்கையிடப்பட்ட கத்தரி வெண்டி பயற்றை போன்ற மரக்கறிகறிகளை விற்கமுடியாமல் வெறுமனே மாட்டுக்குக்கொடுக்கவேண்டிய கையறுநிலையிலிருந்தனர்.
இவர்களின் நிலையினை கருத்தில் கொண்ட காரைதீவுபிரதேசபைத்தவிசாளரும் சமுகசெயற்பாட்டாளருமான கி.ஜெயசிறில் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் சமுகசெயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா அடங்கிய குழுவினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுமார் 1500கிலோவிற்கும் மேற்பட்ட மரக்கறி வகைகளை விவசாயிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டு அதைனை மக்களுக்கு நிவாரணமாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மே தினமான !.
இந் நிலையில் (உழைப்பாளர்) மேதினத்திலும் மேற் குறித்த குழுவினரால் பெருமளவிலான ஒரு தொகை மரக்கறி வகைகள் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மணற்சேனை கிராமத்தில் விவசாயிகளிடம் இருந்து பெற்றுக்ககொள்ளப்பட்டது மே தினமான இன்று இவர்களின் செயற்பாடு பாராட்டத்தக்கதாக இருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் காரைதீவுபிரதேசபைத்தவிசாளரும் சமுகசெயற்பாட்டாளருமான கி.ஜெயசிறில் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் சமுகசெயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா அவர்களுடன் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் அவர்களும் பிரதேச கிராம நிலாதாரியும் கலந்து கொண்டு மணற்சேனையில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் மரக்கறி வகைகளை பறிப்பதனை படங்களில் காணலாம் .
விவசாயிகளுக்கும் மக்களுக்கும் பலன்தரும் இத் திட்டமானது தொடர்ந்தும் இக் குழுவினரால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மரக்கறி உற்பத்தியீலீடுபட்டு அதனை விற்கமுடியாமல் திண்டாடிய ஏழைவிவசாயிகளுக்கும் மரக்கறித்தட்டுப்பாட்டால் அல்லலுறும் பொதுமக்களுக்கும் நிவாரணமளிக்கும் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். அதாவது இருசாரார் பயன்பெறும் இரட்டைநிவாரணத்திட்டமாகும்.