யானை தாக்கி வயோதிபர் பரிதாபகரமாக பலி

கோமாரி மணல்சேனைக் பகுதியில் யானை தாக்கி 75வயது வயோதிபர் பரிதாபகரமாக பலி
 
அம்பாறை பொத்தவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோமாரி மணல்சேனைக் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் 75வயது வயோதிபர் பரிதாபகரமாக நேற்று மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவ் சம்பவம் தொடர்பாக தெரியவருவது யாதெனில் நேற்று கற்குவாரியில் வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டு இருந்த வேளை பாதையின் அருகில் இருந்த பற்றைப் புதருக்குள் மறைந்திருந்த காட்டு யானை குறித்த நபரை தாக்கியுள்ளதாகவும் சம்பவ இடத்தில் அவர் மரணமடைந்தள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்து இருந்தனர்.
 
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிசார் மற்றும் அதிகாரிகள் வருகை தந்து சடலத்தினை பார்வையிட்டதனைத் தொடர்ந்து நேற்று மாலை சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்ததுடன் இன்று வெள்ளிக்கிழமை காலை சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
 
இவ்வாறு மரணமடைந்தவர் கோமாரி மணல்சேனைக் கிராமத்தைச் சேர்ந்த ஜந்து பிள்ளைகளில் தந்தையான 75வயது கருப்பையா நீலமேகம் என்பதுடன் இவர் மிகவும் வறுமையான நிலையில் தினக்கூலி ஊடாக தனது வாழ்கையினை முன்னெடுத்து வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
இவ்வாறு கோமாரி பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக மக்களின் வாழ்வாதார தொழில்கள் பாதிக்கப்பட்டு வருவதுடன் இதுவரை மூன்று உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனைக் கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யானை வேலியினை பூர்த்தி செய்து  தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts