ரவீந்திரன் எழுதிய கல்வியில் வெற்றிகரமான கற்றல் _ கற்பித்தல் நூல் வெளியீட்டு விழா

)
 
மட்டக்களப்பு கிரான்குளம் கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் எழுதிய கல்வியில் வெற்றிகரமான கற்றல் _ கற்பித்தல் நூல் வெளியீட்டு விழா அண்மையில் கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்த அழகியல் கற்கை நிறுவகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கே.மோகனதாசன் தலைமையில் கிரான்குளம் ஸீமூன் காடின் ரிசோட்டில் இடம்பெற்றது.
 
கல்விமாணி கற்கைநெறி இணைப்பாளரும் , ஓய்வுபெற்ற ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபருமான ஏ.எஸ்.யோகராசா முன்னிலையில் இடம்பெற்ற மேற்படி நூல் வெளியீட்டு விழாவில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி என்.சத்தியானந்தி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
வினாயகர் ஆலய பிரதம குரு சிவஶ்ரீ  எஸ்.கே.சுப்ரமணியசர்மா ,கல்வியாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related posts