சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி கோட்டத்திலுள்ள கமு சது றாணமடு இந்துக் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று சிறப்பாக நடைபெற்றன.
றாணமடு இந்துக்கல்லூரியின் அதிபர் கே.கதிரைநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் ஜனாப் எம்.எஸ்.எஸ். நஜீம் அவர்கள் பிரதம அதிதியாகவும் பிரதிக் கல்வி பணிப்பாளர்களான ஜனாப்.எஸ்.எம்.எம். அமீர் மற்றும் செல்வி.வி.நிதர்சினி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் பீ.எஸ்.ஐ இணைப்பாளர் கே.செல்வராஜா முன்னாள் அதிபர் கே.தியாகராஜா ஓய்வுபெற்ற முன்னைநாள் அதிபர் பீ.நடராஜன் நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய அதிபர் என்.பாலசிங்கம் கொலிகுரோஸ் மகா வித்தியாலய அதிபர் அருட்சகோதரி சிறிய புஸ்பம் இந்துமத மதகுரு சிவஸ்ரீ தி.கு தேவகுமார் குருக்கள் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் வேள்ட் விசன் நிறுவனத்தின் முகாமையாளர் எஸ்.செல்வபதி சென்றல்கேம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் பழைய மாணவர்கள் விளையாட்டுக் கழகங்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் ஓட்ட நிகழ்வுகள் அஞ்சல் ஓட்டங்கள் அணிநடை வகுப்புக்கள் உடற்பயிற்சி கண்காட்சிகள் வினோத உடை போட்டிகள் என்பன நடைபெற்றதுடன் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான சான்றிதழ்களும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கிவைக்கப்பட்டன. சேரன் சோழன் பாண்டியன் எனும் மூன்று இல்லங்களுக்கிடையில் கடுமையான போட்டியுடன் 466 புள்ளிகளை பெற்று பாண்டியன் இல்லம் முதலிடத்தை தட்டிக் கொண்டது.
இந்நிகழ்வில் உரைநிகழ்த்திய சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் ஜனாப் எம்.எஸ்.எஸ். நஜீம் அவர்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் சளைக்காது இல்ல விளையாட்டுப் போட்டியை சிறப்பாக நடாத்தி வருகின்ற றாணமடு இந்து கல்லூரி விளையாட்டில் பல சாதனைகள் படைத்து வருகின்றது மாகாண மட்டத்தில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்ற மாணவி றெபேக்கா இப்பாடசாலையை சேர்ந்தவர் அதுபோல இன்னும் பல சாதனைகளை படைத்து வரும் றாணமடு இந்து கல்லூரியின் மாணவர்கள் அதிபர் ஆசிரியர்களுக்கு தன் பாராட்டுக்களை தெரிவித்ததுடன் தேசிய ரீதியில் விளையாட்டில் 9ம் இடத்திலிருக்கும் கிழக்கு மாகாணத்தை றாணமடு இந்து கல்லூரியின் முழுமையாக பங்களிப்போடு முன்னோக்கி நகர்த்த மாணவர்கள் பல சாதனைகள் புரிய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.