லண்டன் சிவன் கோயில் மகளிர் உயர்கல்வி மையம்பொருளாதார வசதி குறைந்த G.C.E. A/L உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பிரிவுகளில் கற்க விரும்பும் பெண் மாணவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்கலாம்( 2018 G.C.E. O/L பரீட்சைக்குத் தோற்றிய கிழக்கு மாகாண மாணவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்)பொருளாதார வசதி குறைந்த குடும்பப் பிண்ணனி கொண்ட குடும்பங்களில் உள்ள கடந்த 2018 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவர்களின் நன்மை கருதி லண்டன் சிவன் கோயில் அறக்கட்டளை நிதியத்தின் பங்களிப்புடன் செட்டிபாளையத்திலுள்ள சிவன் சிறுமியர் இல்லத்தில் தங்கியிருந்து கற்கக் கூடிய வகையில் இவ்வகுப்புகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. இதன் நோக்கமானது மிகவும் பின்தங்கிய பிரதேச மாணவர்கள் கணித, விஞ்ஞானப் பிரிவுகளில் கற்கக் கூடிய சிறந்த பெறுபேறு இருந்தும் தங்களது பொருளாதார நிலையினால் இச் சந்தர்ப்பத்தைத் தவற விடுகின்ற மாணவர்களின் எதிர்கால வாழ்விற்கு ஒளியேற்றவே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது
இவர்களில் தெரிவு செய்யப்படுவோருக்குரிய பிரத்தியேக வகுப்புகள், உணவு, தங்குமிடம் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படும். இம்மாணவர்கள் செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயில வேண்டும். சகல பிரத்தியேக வகுப்புகளும் செட்டிபாளையம் மகா வித்தியாலயத்துடன் இணைந்த வகையிலேயே செயற்படுத்தப்படவிருக்கின்றது. இதற்காக தரமான வளவாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இதில் இணைய விரும்புவோர் கீழ்வரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து எதிர்வரும் 25.04.2019 ஆந் திகதிக்கு முன்பாக அனுப்பி வைக்கவும்.
திரு. த. அருள்ராஜ்,
தலைவர்.
‘செட்டிபாளையம் லண்டன் சிறுமியர் இல்லம் ‘;
செட்டிபாளையம்.