வடக்கும் தெற்கும் ஏற்றுக்கொள்ளும் ஒரு நபரையே ஜனாதிபதி வேட்பாளராக முன்நிறுத்தவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமால் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன்இ இந்தியா சென்றுள்ள நிலையில் இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் நாமல் ராஜபக்ஷ, இந்திய ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.
அந்த வகையில், நாமல் ராஜபக்ஷ இந்திய ஊடகமொன்றிடம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கும் தெற்கும் ஏற்றுக்கொள்ளும் ஒரு நபரையே, வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
தமது கட்சி பல கட்சிகளை உள்ளடக்கியது என்றும், எனவே அனைவரும் ஒன்றிணைந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய வேட்பாளரைத் தெரிவு செய்யவுள்ளதாகவும் கூறினார்.
இந்தியாவுடன் தமது உறவுகளைப் பலப்படுத்தவே விரும்புவதாக கூறிய நாமல், மத்தள விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை, இந்தியாவின் உதவியுடனேயே அமைக்க இருந்தபோதிலும், அப்போது இந்தியா முன்வராததால் சீனாவுடன் இணைந்து அவற்றை நிர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.