வயலுக்கு உரம் பெறச்சென்றவர் விபத்தில் பலி-வவுணதீவில் சம்பவம்

வவுணதீவு பெலிஸ்பிரிவிற்குட்பட்ட தாண்டியடி வாழைக்காலை பிரதான வீதியில் இன்று காலை (29) இடம் பெற்ற விபத்தில் அம்பிளாந்துறை பிரதேசத்தைச்சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான மயிலாப்போடி-சுந்தரலிங்கம் வயது (59) என்பவரே தலத்தில் பலியானதான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
சம்பவ தினத்தன்று தனது வீட்டிலிருந்து தனது வயலுக்கான உரத்தை பெற்றுக்கொள்வதற்காக மண்டபத்தடி கமநல கேத்திர நிலையத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது குறித்த வீதியில் எதிர்திசையில் பயணித்துக்கொண்டிருந்த வான் கட்டுப்பட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது மோதியதில் குறித்த நபர் தலத்தில் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
 
மட்டக்ளப்பு  நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Related posts