வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைகட்டியவெளி பிரதேசத்தில் வயலை அண்டிய இடமொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று மாலை (9) திகதி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் களுதாவளை பிரதேசத்தைச்சேர்ந்த (63) வதுடைய சரவணமுத்து தங்கவேல் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவர் நீண்ட நாட்களாக தனது மனைவி பிள்ளைகளை பிந்து தனது உறவினர்களின் வீடுகளில் வாழ்ந்து வந்ததாகவும் அவர் நாளார்ந்தம் பல இடங்களில் கூலித்தொழிலுக்கு சென்று வருவதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் க.ஜீவராணி அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.