வரட்சி காரணமாக நாட்டின் 9 மாவட்டங்களில் சுமார் 2 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வட மத்திய மாகாணம் உள்ளிட்ட சில மகாணங்களில் குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
ஏதேனும் ஒரு பகுதியில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவுமாயின் அது குறித்து அறிவிக்குமாறு இடர்முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
117 என்ற தமது தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி, தமது பிரச்சினை குறித்து அறியத்தர முடியும் என இடர்முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் அமைப்பின்...
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்....
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில்...