மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயக்கல்விப் பணிப்பாளராக அகிலா கனகசூரியம் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயக்கல்விப் பணிப்பாளராக அகிலா கனகசூரியம் இன்று திங்கட்கிழமை(17)காலை 8.00 மணியளவில் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.இவ்வாறு கடமையை பொறுப்பேற்கும் நிகழ்வில் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள்,உதவிக்கல்வி பணிப்பாளர்கள்,கோட்டக்கல்வி பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள், வலயக்கல்வி அலுவலக உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டார்கள்.
குறித்த கல்வி வலயத்திற்கு கல்வி நிர்வாகசேவை வகுப்பு 1ஐ சேர்ந்தவரை நியமிக்கும் பொருட்டு கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் அண்மையில் நேர்முகத்தேர்வு நடாத்தப்பட்டது.இந்நேர்முகத்தேர்வில் அதிக புள்ளிகளைப் பெற்ற அகிலா கனகசூரியம் வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனக்கடிதம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் கடந்த(12) புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த வலயக்கல்விப் பணிப்பாளர் கல்வி அமைச்சின் திட்டமிடல் பிரதிக்கல்விப் பணிப்பாளராகவும்,மூதூர் வலயக்கல்விப்பணிப்பாளராகவும்,கடமையாற்றியதுடன், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளராகவும், கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் குறித்த வலயத்திற்கு வலயக்கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள்,புத்திஜீவிகள் ஒன்றிணைந்து வலயக்கல்வி பணிப்பாளர் அகிலா கனகசூரியத்துக்கு மலர்மாலை அணிவித்து அமோக வரவேற்பு வழங்கி வலயக்கல்வி பணிப்பாளரை வரவேற்றமை மெச்சத்தக்க செயற்பாடாகும்.
இதேவேளை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றிய வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சிறிதரன் திருகோணமலை கல்வி வலயத்திற்கு வலயக்கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக மாகாணக்கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஷாம் தெரிவித்தார்.
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் அமைப்பின்...
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்....
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில்...