விபத்துக்குள்ளான பிலிப்பைன்ஸ் மாலுமி தேறிவருகிறார்! செய்தியாளர் மாநாட்டில் சத்திரசிகிச்சைநிபுணர் சிறிநீதன்.

சங்குமண்கண்டி கடற்பரப்பில் எரிந்துகொண்டிருந்த பனாமாக்கப்பலிலிருந்து கடற்படையினரால் மீட்கப்பட்ட பிலிப்பைன்ஸ் மாலுமி பொறியியலாளர் எல்மோ  தற்போது படிப்படியாகத் தேறிவருகிறார்.
 
இவ்வாறு இவ்வாறு கல்முனை ஆதாiவைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணர்  வைத்தியகலாநிதி டாக்டர் எஸ்.சிறிநீதன் செய்தியாளர்   மாநாட்டில் தெரிவித்தார்.
 
இச்செய்தியாளர் மாநாடு (4)வெள்ளிக்கிழமை பகல் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் இவ்வாறு கல்முனை ஆதாiவைத்தியசாலை வைத்தியஅத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. மயக்கமருந்தூட்டும் நிபுணர் டாக்டர் கே.தேவகுமாரும் கருத்துரைத்தார்.
 
நேற்று(3)மாலை  கடற்படையினரால் கொண்டுவரப்பட்ட 57வயதான பிலிப்பைன்ஸ் மாலுமிக்கு எவ்வித தீக்காயங்களும் இருக்கவில்லை. மாறாக கப்பலின் வொயிலர் வெடித்தவிபத்து காரணமாக நெஞ்சிலும் வயிற்றுப்பகுதியிலும் பாரிய வெட்டுக்காயங்களிருந்தன. விலாஎலும்பு உள்ளிட்ட சில எலும்புகள் முறிவுக்குள்ளாகியிருந்தன.
 
 இரவு 3மணிநேரம் சத்திரசகிச்சை நடைபெற்றது.அதன்பின்னர் அதிதிவீரசிகிச்சைப்பிரிவில் செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டநிலையில் சிகிச்சைபெற்றுவருகிறார். முன்பிருந்ததைவிட தற்போது தேறிவருகிறார்.
கொரோனா அறிக்கை கிடைத்ததும் மேலதிக சிகிச்சை தொடரும். என்றார்.

Related posts