விவசயக் குடும்பங்களுக்கு உயர் இன பப்பாசி கன்றுகள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள இரண்டு கிரம சேவகர் பிரிவுகளிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  80 விவசயக் குடும்பங்களுக்கு 1600
உயர் இன பப்பாசிக் கன்றுகள்  திங்கட்கிழமை (08) வழங்கிவைக்கப்பட்டது.
 
 
இவ் உதவி அக்சன் யுனிற்ரி லங்கா நிறுவனத்தினால் கன்னங்குடா மற்றும் ஈச்சந்தீவு பேன்ற கிரமங்களைச் சேர்ந்த எண்பது விவசயக் குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
 
இயற்கை கூட்டெரு பாவனையை ஊக்குவித்து விவசாய நிலங்களை பாதுகாத்து பயிர்செய்கையினை மேற்கொண்டு குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
 
 
 
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில்   இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலளர் எஸ்.சுதாகர்,  அக்சன் யுனிற்ரி லங்கா நிறுவனத்தின் சிரேஷ்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜே.வி. பிரகாஷ், திட்ட உத்தியோகத்தர் கே.சதீஸ்குமார், மற்றும் விவசயிகள் இளைஞர்கள் என பலர் கலந்துகெண்டனர்.

Related posts