கடந்த 3 வருட காலப்பகுதியில் வர்த்தக வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட 50 மில்லியன் ரூபா வரையிலான கடன் தொகைக்கு வட்டி மற்றும் தண்டப்பணம் முற்றாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த தொகையை அரசாங்கம் செலுத்தவுள்ளது.
கடந்த 3 வருட காலப்பகுதியில் குறைந்த வளர்ச்சி வீதம் மற்றும் வாழ்க்கைச்செலவின் மூலம் பொருளாதாரம் பெருமளவில் வீழ்ச்சிகண்டிருந்தது.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , நிதி மற்றும் பொருளாதார அமைச்சரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் கவனம் செலுத்தியுள்ளனர். இந்த நிலை அதிகரித்தமை நாட்டில் நிலவிய நிலைமைக்கு பொருத்தமற்ற , தேசிய தொழிற்துறையினர் மற்றும் கைத்தொழில் துறைக்கு பெரும் பாதிக்கும் வகையிலான முன்னைய அரசாங்கத்தின் கொள்கைகளின் பிரதிபலனாகும் என்று கௌரவ பிரதமர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் மிக பொருத்தமான காலநிலையுடன் 2018/2019 பெரும்போக நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. அத்தோடு மின் உற்பத்தி, குடிநீர் விநியோகம் மற்றும் உற்பத்திக்கு போதுமான வகையில் நீர் மற்றும் நீர்ப்பாசன முறை ஆகக்கூடிய செயல்பாட்டுக்கு வழிவகுத்துள்ளது.
இதன் மூலம் புதிய வலுவுடனான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
இது விவசாய உற்பத்தியின் மூலம் ஆகக் கூடிய பயன்களை பெற்றுக்கொள்வதற்கு நாட்டை தயார்படுத்துவதற்கு இது பொருத்தமான சந்தர்ப்பமாகும் என்று அரசாங்கம் நம்புகின்றது.
இதனுடன் அதிக வாழ்க்கைச்செலவு மூலம் நுகர்வோர் மீது பாரிய சுமை சுமத்தப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் கௌரவ பிரதமர் மற்றும் நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்காக கீழ் கண்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய விவசாயிகளை பாதுகாப்பதுடன் ஆக கூடிய வாழ்க்கை செலவின் காரணமாக ஏற்பட்டுள்ள அழுத்தத்தை சம படுத்துவதற்கு விசேட வர்த்தக பொருட்கள் வரி பருப்புக்காக ஒரு கிலோ கிராமிற்கு 5 ரூபா வீதமும் கடலை ஒரு கிலோ கிராமுக்கு 5 ரூபா விதமும் உளுந்துக்காக ஒரு கிலோவிற்கு 25 ரூபாவும் விலை குறைக்கப்பட்டுள்ளது. கோதுமைக்காக நிலவிய ஒரு கிலோ கிராமிற்கு ரூபா 6ற்கு இறக்குமதி நிவாரணம் 9 ரூபா வரை அதிகரிக்கப்படுகிறது. சீனிக்கான விசேட வர்த்தக பொருட்கள் வரி ஒரு கிலோவிற்கு 10 ரூபாவினால் குறைக்கப்படுகிறது. இதற்கமைவாக அத்தியாவசிய பாவனையாளர்களுக்கான பொருட்களின் விலை உடனடியாக குறைக்கப்படுகிறது.
சமுர்த்தி பயனாளிகளுக்கு நன்மை கிடைக்க கூடிய வகையில் விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நெல் உற்பத்திக்காக வழங்கப்படும் 50 கிலோகிராம் எடை கொண்ட உர பொதியின் விலை 500 ரூபாவாக முன்னெடுக்கப்படுவதுடன் ஏனைய உற்பத்திகளுக்கான 50 கிலோ எடை கொண்ட உர பொதி நிவாரண விலை 1500 ரூபாயில் இருந்து 1000 ரூபாவாக குறைக்கப்படுகிறது.
நிதி நிறுவனங்களை நடத்தும் சேமிப்பு மற்றும் நிலையான வைப்பின் அடிப்படையில் கிடைக்கப்படும் வட்டி வரிகளில் இருந்து விடுவிக்கப்படுகிறது. தொலைபேசி சேவைக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை கவனத்தில் கொண்டு 25 சதவீதமான தொலை தொடர்பு வரி 15 சதவீதமாக குறைவடைகின்றது.
சிறிய மற்றும் நடுத்தர ஆடை உற்பத்தி பயனாளிகளுக்கு வழங்குவதற்காக இறக்குமதி புடவை வரிக்காக வெட் வரி நீக்கப்படுகிறது.