வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் கிராம வேலைத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி அவர்களின் வேண்டுதலுக்கமைய 4.5 மில்லியன் ரூபா செலவில் வேலைத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
 
பிரதேச செயலாளர் அவர்களின் வேண்டுதலுக்கமைய பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி அவர்களின் வேண்டுதலுக்கமைய தேசிய கொள்கைகள்; பொருளாதார விவகாரங்கள் அமைச்சினூடாக இதற்கான நிதியினை பெற்று மண்டூர் முருகனாலயத்திற்கு குடி நீர் வசதிக்காக 1.5 மில்லியன் ரூபாவும் வம்மியடியூற்று பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி சண்முகராஜா வீதியினை புனரமைப்பதற்காக 2 மில்லியன் ரூபாவும், வெல்லாவெளி பிரதேசத்தின் வீதியினை புனரமைப்பதற்காக 1 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
நாட்டில் அரசியல் நிலவரம் மாற்றம் காணப்பட்டுள்ள நிலையிலும் படுவான் கரை பிரதேசத்திலுள்ள கிராமங்களின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனை அப்பிரதேச மக்கள் வரவேற்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.அன்றைய இந்நிகழ்வில் பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி மற்றும் பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி ஆலய நிருவாகத்தினர் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடதக்கது

Related posts