கொரோனா நெருக்கடி ஆரம்பித்தநாளிலிருந்து இதுவரை வெளிநாடுகளில் இருந்து கல்முனைப்பிராந்தியத்திற்குள் வந்த பிராந்தியத்தைச்சேர்ந்த 1005 பேரில் சுயதனிமைப்படுத்தலின்பின்னர் 984பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 21பேர் மேலும் சுயதனிமைப்படுத்தலிலுள்ளனர்.
இவ்வாறு சமகாலத்தில் கல்முனைப்பிராந்திய கொரோனா நிலைவரம் தொடர்பாகக்கூறிய கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் குணசிங்கம் சுகுணன் ; மேலும் தெரிவிக்கையில்;.
கல்முனைப்பிராந்தியத்தில் இதுவரை ஆக இருவரே முதல்தர தொற்றுக்கு இலக்காகி இனங்காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இரண்டாந்தரதொற்றுக்கு ஆளாகியிருந்தார்.
இதேவேளை ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இதுவரை அனுமதிக்கப்பட்ட 181பேரில் 51பேருக்கு தொற்றுஇருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுபபிவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 62பேர் தற்சமயம் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப் பட்டுள்ளனர்.
இலங்கையின் வேறு பிரதேசங்களிலிருந்து கல்முனைப்பிராந்தியத்திற்குள் வந்த 2282பேரில் சுயதனிமைப்படுத்தலின்பின்னர் 1868பேர் விடுதலையாகியுள்ளனர். 414பேர் இன்னும் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
இதுஇவ்வாறிருக்க 230பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள செய்யப்பட்டுள்ளன. ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 292பேருக்கும் சமுகத்தில் 8பேருக்குமாக இப்பரிசோதனை நடாத்தப்பட்டது.