கொரோனா நடவடிக்கையில் சிகிச்சையளிக்கும் வைத்தியர்களுக்கு பாதுகாப்பான வைத்திய அங்கிகளை பாம் பௌண்டேஷன் மட்டக்களப்பு சுகாதார பணிப்பாளருக்கு அன்பளிப்பு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் நோயாளருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்களுக்கு பாதுகாப்பான வைத்திய அங்கிகளை அன்பளிப்புச்செய்ய அமெரிக்க உதவித்திட்டத்தில் இயங்கும் பாம் பௌண்டேஷன் தொண்டார்வ நிறுவனம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு இன்று (09) அன்பளிப்பு செய்துள்ளது.
இந்நிறுவத்தின் உத்தியோகத்தர்கள் குழு இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதிபத்மராஜாவிடம் மாவட்டசெயலகத்தில் வைத்து சுமார் இரண்டு இலட்சத்தி80 ஆயிரம் ரூபா பெறுமதியானபாதுகாப்பான வைத்திய அங்கிகளைகையளித்தனர் .இவற்றை பிராந்திய தொற்றுநோயியல் வைத்திய அதிகாரி எஸ்.குணராஜசேகரம் அரச அதிபரிடம் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதனூடாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் நிருவாகத்தில் செயல் படும் வைத்தியசாலை வைத்தியர்களுக்கு சிகிச்சை வழங்க பெரிதும் எதிர்பாக்கப்படுகின்றது