இலங்கையில் பிரசித்த பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 18 ஆம் நாள் திருவிழாவான இன்று வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு நிகழ்வு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பாக இடம்பெற்றது.
வருடாந்த உற்சவம் கடந்த (04/09/2018) செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது நாளை 22 ஆம் திகதி சனிக்கிழமை பாற்பள்ளையத்துடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.
மகாபாரத வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் திருவிழா சடங்குகள் 18 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது இவ்வாலயத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். உற்சவ காலத்தில் கல்முனை பிரதேசமே கோலாகலமாக காட்சியளிப்பதுடன், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் வருகைதருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.