ஸ்ரீ வீரபத்திரசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்.

காரைதீவு ஸ்ரீ வீரபத்திரசுவாமி ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்(22) ஆரம்பமாகியது.
 
இவ் உற்சவமானது தொடர்ச்சியாக 9தினங்கள் திருவிழாக்களுடன் இடம்பெற்று அக்டோபர் 01ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.
 
மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களின் பிரசன்னத்துடன் திருவிழாக்கள் இடம்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
29ஆம் திகதி சப்பறத்திருவிழா ஊர்வலமானது நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் அக்காலசூழ்நிலைகருதியே இது நடைபெறுமென தெரியவருகிறது.
 
நாட்டின் கொரோனா நடைமுறைகளுக்கமைவாக நேர்கடன்செலுத்துதல் உள்ளிட்ட சில ஏற்பாடுகளுக்கு தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளன.
சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோர்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென காரைதீவு பிரதேசசெயலக மேலதிக மாவட்டப்பதிவாளர் எஸ்.பார்த்தீபன் ஆலயநிருவாகத்திற்கு அறிவித்துள்ளார்.
 
தீர்மானங்களை மீறி பொதுமக்கள் கூடுதலாகஒன்றுகூடும் சந்தர்ப்பம்  ஏற்பட்டால் அதற்கு ஆலயநிருவாகமே பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts