ஹர்தால் மற்றும் கடைகள் பூட்டுவதை தடைசெய்தும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்தாலுக்கு தடைவிதித்தும் கடைகள் பூட்டுவதை தடைசெய்தும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதிபதி இன்று (24) கட்ளையிட்டுள்ளார் என  ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண ஆளுநராக ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டமை எதிர்த்து நாளை வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு தமிழர்; உணர்வாளர் அமைப்பின் தலைவர் பூரண ஹர்தால் அனுஷ;டிக்குமாறு கோரிக்கை விட்டிருந்தார்

இந்த நிலையில் எறாவூர் பொலிசார் இந்த ஹர்த்தாலால் மாவட்டத்தில் ஒரு குழப்பகரணமான சூழலை ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் இதனால் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதுடன் பொதுமக்கள்  பாதிக்கப்படும் என  எதிர்ப்பு  தெரிவித்தும்.

இவர் கடந்த மாதம் ஒரு காணிப்பிரச்சனையில் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார் என தமிழர்; உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை  ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டது

இதனையடுத்து இந்த வழக்கை எடுத்துக் கொண்;ட நீதிபதி மாவட்டத்தில் ஹர்தாலுக்கு தடைவிதித்தும் கடைகள் பூட்டுவதை தடைசெய்தும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகுமாறும் கட்டளையிட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது 

Related posts