இந்தநாட்டின் அரசியலமைப்புத்திருத்தங்களில் சிறுபான்மையினரின் நலனுக்காக கொண்டுவரப்பட்டதே 13வது திருத்தம்.மேலும் மக்களின் உரிமைசுதந்திரங்கள் பேணப்படுவதற்கு வசதியாக 19கொண்டுவரப்பட்டது. இவற்றை புதிய அரசு ஒழிக்கமுற்படுமாயின் அது சிறுபான்மை மக்களின்மீது கைவைப்பதற்குச்சமன். அதற்கு அனுமதியோம்.
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பில் மட்டு.மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் 13இலும் 19இலும் கைவைக்கவிருப்பதாக துறைசார்ந்த அமைச்சர்கள் கூறிவருகின்றார்களே. இதுபற்றி என்னகூறுகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
உண்மையில் 13 மற்றும் 19ஆம் திருத்தங்களை மீண்டும் திருத்துவதோ நீக்குவதோ அவசியமற்றதொன்று. இந்தநாட்டில் எப்போது பண்டா செல்வா ஒப்பந்தம் எப்போது கிழித்தெறியப்பட்டதோ அன்று தொடக்கம் பிரச்சினை ஆரம்பமானது. நாட்டில் இன்றுவரைக்குமான இனப்பிரச்சினைக்குகாரணமே அதுதான்.. அது நடைமுறைக்குவந்திருந்தால் பிரச்சினையே இல்லை அதேபோன்றதொரு நிலை உருவாக்க இந்நீக்கம் வழிகோலும்.எனவே அதற்கு இடமளிக்கமுடியாது.
அன்று இலங்கையை ஆண்ட வெள்ளைக்காரனே சிறுபான்மையினர்க்கான காப்பீடு என்ற சரத்தை யாப்பில் முன்வைத்திருந்தார்கள். ஆனால் இன்று சுதேசமக்களே சிறுபான்மையித்திற்கான உரிமைகளை நசுக்கும் சிந்தனையிலிருப்பது கவலைக்குரியது.
தமிழ் மக்களின் தொடர்போராட்டத்தை மையமாகவைத்து இந்தியஅரசின் தலையீட்டில் மாகாணசபை முறைமையைக் கொண்டுவந்தது இந்த 13. அதனை மேலும் காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கி வலுப்படுத்துவதை விட்டுவிட்டு அதை நீக்குவதென்பது நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும். வடக்கிற்கு மட்டும் காணிபொலிஸ் அதிகாரத்தை வழங்கமுடியதென்று அமைச்சர் கூறுவது சர்வாதிகாரம்.அது அவரால் முடியாது. அப்படியொருநிலை வந்தால் அதற்கெதிராக நாம் வலுவாகப் பேராடுவோம்.
சுயாதீனஆணைக்குழுக்களை நியமித்தமை ஜனாதிபதியின் எதெச்சதிகார அதிகாரத்தை ஒரளவிற்காவது குறைத்தது 19. எனவே ஜனநாயகம் உண்மையில் இந்நாட்டில் நிலவவேண்டுமாயின் இவற்றில் கைவைப்பதைவிடுத்து சிறுபான்மையை அரவணைத்து நாட்டை சுபீட்சமாக்கும் வேலைiயில் ஈடுபடுதல் சகலருக்கும் நல்லது. என்றார்.