ஏப்ரல் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட கூடுதல் விடுமுறையை வங்கி மற்றும் வணிக விடுமுறை என பொது நிர்வாகம், உள்துறை மற்றும் மாகாண அமைச்சகம்(Ministry of Public Administration, Home Affairs and Provincial ) வரையறுக்காததால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி(Gazette) அறிவித்தலில் பொது விடுமுறை என்று மாத்திரமே கூறப்பட்டுள்ளது.
வங்கி நடவடிக்கைகள்
எனவே அன்றைய தினம் வங்கி(Bank) மற்றும் வணிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா என்ற குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, 15 ஆம் திகதி விடுமுறை தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
மேலும் எதிர்வரும் 15 ஆம் திகதி வங்கி விடுமுறையா என்பதை அறிய நீங்கள் வர்த்தமானி அறிவிப்பை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.