(இன்று 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை) பகல் 12மணிக்குள் கல்முனைத்தமிழருக்கு தீர்வு வேண்டும்.இவ்வாறு கல்முனையில் கடந்த 4தினங்களாக நடைபெற்றுவரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக அதற்கு ஆதரவுதெரிவித்து கல்முனைக்குவந்த பாராளுமன்ற உறுப்பினர் வண.சுமணதேரர் உண்ணாவிரதிகளைச்சந்தித்த பின்னர் பேசுகையிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் கூறுகையில்:
கல்முனைத்தமிழர்களின் உரிமை கடந்த 30வருடங்களாக மாறிமாறிவந்த அரசாங்கங்களால் மறுக்கப்பட்டுவந்துள்ளது. இலங்கையிலுள்ள 28உப பிரதேசசெயலகங்கள் தரமுயர்த்தப்படும்போது கல்முனை வடக்குமட்டும் விடுபட்டிருக்கிறது. இதற்கு முஸ்லிம் ஒருசில அரசியல்வாதிகள் பின்னால் இருப்பது தெரிகிறது.உடனடியாக கல்முனை வாழ் தமிழருக்குத் தீர்வு வேண்டும். என்றார்.
இதேவேளை நாடாளுமன்றஉறுப்பினர் வணஅத்துரலிய ரத்ன தேரர் அங்கு கூறுகையில்:
பிச்சைக்காரனின் புண்ணைப்போன்று அரசாங்கம் இந்த விவகாரத்தை இழுத்தடித்துவந்ததே இன்றைய உண்ணாவிரதத்திற்குக்காரணம்.
இத்தரமுயர்த்தலுக்கு தடையாக உங்களுக்கான காணி நிதி அதிகாரங்களை வழங்கத்தடையாக முஸ்லிம்அரசியல்வாதிகள் சிலரிருப்பது கவலைக்குரியது.
மாவட்ட அரசாங்க அதிபருக்கு இதுபற்றி 2நாட்களில் விரிவானஅறிக்கை சமர்ப்பிக்கமுடியும். எனவே முறைப்படி அவற்றை விரைவாக வழங்கி தரமுயர்த்தப்படவேண்டும் என்றார்.