29வருடகல்விச்சேவையாற்றி இன்றுஓய்வுபெறும் கல்விஅலுவலர் அச்சிமொகமட்.

கல்விப் பணியில் 29 வருடகாலம் நிறைபணியாற்றிய சம்மாந்துறை வலய சமாதானக்கல்வி உத்தியோகத்தரான ஆதம்பாவா அச்சிமொகமட்;  இன்று(03) திங்கட்கிழமை தனது 60வது வயதில் ஓய்வுபெறுகிறார்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மாந்துறைத்தொகுதியின் அமைப்பாளரான இவர் சம்மாந்துறை பிரதேசசபையின் உபதவிசாளராவார். ஜனாப்  அச்சிமொகமட் அரசியலுக்கு அப்பால் சமய கலாசார சமுகத்துறைகளிலும் சமுதாயத்தில் பல கௌரவமான பதவிகளை வகித்துவருபவராவார்.
 
சம்மாந்துறையைச்சேர்ந்த ஆதம்பாவா குழந்தையும்மா தம்பதிகளின் புதல்வரான இவருக்கு 3சகோதரிகளும் 3சகோதரர்களுமுள்ளனர். இவர் எம்.ஜ.தஸ்லிமாவை இல்லறத்தில் இணைத்து 6பிள்ளைகளின் தந்தையாவார்.
இவர் ஆரம்பக்கல்வியை பெண்கள் பாடசாலையிலும் உயர்கல்வியை முஸ்லிம் மத்திய கல்லூரியிலும் பயின்று 1992இல் ஆசிரியராக நியமனம்பெற்றார்.  2008இல் வலய சமாதானக்கல்வி உத்தியோகத்தராக பதவியுயர்வுபெற்று ஓய்வுபெறும்வரை சிறப்பானபணியாற்றினார். இடையில் இருவருடங்கள் சுனாமி உணவு திட்டத்திலும் மேலதிகபணியாற்றினார்.
இதேவேளை கல்விப்பணிக்கு அப்பால் சமய சமுக அரசியல் துறைகளிலும் தடம்பதித்துள்ளார்.
அரசியலில் இயல்பாகவே நாட்டம்கொண்ட இவர் 2011இல் உள்ளுராட்சிசபைத்தேர்தலில் போட்டியிட்டு சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டு மக்கள்பணியாற்றினார். இரண்டாவது தடவையும் அவர் தெரிவாகினார்.
 
இந்நிலையில் 2020ஆம் ஆண்டில் சபையின் உபதவிசாளராகவிருந்த வெ.ஜெயச்சந்திரன் இராஜினாமாச்செய்ததையடுத்து சபையின் உபதவிசாளராக சேவையாற்றிவருகிறார்.
 
சம்மாந்துறை கபூரியா பள்ளிவாசல் தலைவராகவும் பொன்னன்வெளி விவசாயஅமைப்பின் தலைவராகவும் சம்மாந்துறை பொலிஸின் சிவிலபாதுகாப்புக்குழுத்தலைவராகவும் மேலும் பல அமைப்புகளில் பதவிகளை வகித்துவந்த வருகின்ற முக்கியஸ்தராவார்.
 
கடந்த 29வருடகால கல்விச்சேவையிலிருந்து இன்று 3ஆம் திகதி ஓய்வுபெறுகிறார். இருப்பினும் இவரது அர்ப்பணிப்பான கனதியான சேவை தொடர்ந்து சமுகத்திற்கும் இப்பிராந்தியத்திற்கும் கிடைக்கும் என்பதில் ஜயமில்லை.

Related posts