முட்களின் மேல் உறங்கிய இரவுகள்’ கவிதைநூல் வெளியீட்டு விழா வெல்லாவெளியில்  வெளியீட்டு வைக்கப்பட்டது.

வெல்லாவெளி  விவேகானந்தபுரம் படைப்பாளி ஈழக்கவி ரசிக்குமார் எழுதிய ‘முட்களின் மேல் உறங்கிய இரவுகள்’ கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது

(15.07.2018)ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில்  வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது.

விவேகானந்தபுரம் சுடர் சனசமூக நிலையத் தலைவர் நே.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்ற நூல் வெளியீட்டுவிழாவில் பிரதம அதிதிகளாக  போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி.ஆர்.ராகுலநாயகி,போரதீவுப் பற்று பிரதேச சபைச்தவிசாளர் யோ.ரஜனி ஆகியோர்களும், கௌரவ அதிதிகளாக வர்த்தகர் சி.ரஞ்சிதமூர்த்தியும்,கவிஞர் வெல்லவூர் கோபால் மற்றும் நூலாசிரியர்கள், பொதுமக்கள், கலந்துகொண்டார்கள்.

நூலின் வெளியீட்டுயுரையினை ஓய்வுநிலை அதிபர் த.விவேகானந்தம் நிகழ்த்தினார்.நூலினை பிரதம விருந்தினருள் ஒருவரான போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் யோ.ரஜனி வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப் புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி பெற்றுக்கொண்டார்.

வெல்லாவெளி விவேகானந்தபுரம் சுடர் சனசமூக நிலையமும், இளஞ்சுடர் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய இந்நூலின் வெளியீட்டு விழாவில் சிறப்புரையினை கவிக்கோ வெல்லவூர்க் கோபால் ஆற்றியதோடு வடக்கின் படைப்பாளிகள் சார்பில் யோ.புரட்சி உரை நிகழ்த்தினார். ஈழக்கவி ரசிக்குமார் அவர்கள் இளைய படைப்பாளியாக மிளிரத் தொடங்கியபோது அவரால் வெளியீட்டிய முதலாவது நூல் இதுவாகும்.

Related posts