கிழக்கு மாகாணத்தில் கல்வியில் ஏற்பட்டிக்கின்ற பின்னடைவுக்கு மிகமுக்கிய காரணிகளாக நகரப்புற பாடசாலைகளே காணப்படுவதாக கிழக்கு மாகா கல்வி பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஷாம் அவர்கள் தெரிவித்தார்
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தும்பங்கேணி கண்ணகி வித்தியாலத்தின் சாதனையாளர் பாராட்டு விழா அதிபர்.வே.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
நாங்கள் கிழக்கு மாகாண பாடசாலைகளில் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை முடிவுகளை நாங்கள் தற்பொழுது பகுப்பாய்வு செய்துவருகின்றோம். அதன் அடிப்படையில் பின்தங்கிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களே சித்தியடையாத தன்மையினை காட்டிவந்துள்ளது. ஆனால் நிதர்சனமான விடயம் அதுவல்ல என்பதனை நாங்கள் இந்த பகுப்பாய்வு ஊடாக அண்மையில் கண்டுகொண்டுள்ளோம்.
கிழக்கு மாகாணத்தின் கல்வியிலே ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புக்கு யார்காரணம் என்ற விடயத்தினை கண்டுபிடிக்க முனைந்தபோது ஆச்சரியமான முடிவுகள் வந்தது. கிராப்புற பாடசாலைகளை விடநகரப்புற பாடசாலைகள்தான் அதற்கு முக்கியமான காரணம் என நாங்கள் கண்டுகொண்டுள்ளோம்.
முக்கியமாக திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, கிண்ணியா,சம்மாந்துறை, அம்பாரை, பட்டிருப்பு போன்ற வலயங்கள் இதில் முக்கிய இடத்தினை வகிக்கின்ற வலயங்களாக இருந்துள்ளன. இவை அனைத்தமே நகரப்புறங்களை அண்டியதாக இருக்கின்ற மிகமுக்கியமான வலயங்கள் இந்த வலயங்களில் ஒவ்வொரு சாதாரண தரப் பரீட்சைகளிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பரீட்சையில் தோல்வி அடைகின்றார்கள். இந்த உண்மையை நாங்கள் கண்டுகொண்டதன் பின்பு கிட்டத்தட்ட ஆறு வலயங்களிலும் ஆசிரியர்கள்,அதிபர்கள்,பிரதி அதிபர்கள், பகுதி தலைவர்களை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி பலதரப்பட்ட விடயங்களை நாங்கள் பெற்றிருக்கின்றோம்.
ஏன் இந்த இடத்தினை விடயத்தை சொல்கின்றேன் என்றால் அந்த ஆய்வுகளின்போது பின்தங்கிய பாடசாலைகளுக்கு புதிதாக நாங்கள் உயர்தரம், சாதாரண தர வகுப்புகளை வைப்பதற்கு அனுமதியை வழங்கயிருந்த போதும் அதில் அந்த பாடசாலைகள் தோல்வி அடைந்துள்ளது. துரதிஸ்ரவசமாக தொடக்கத்திலே அனைத்து மாணவர்களும் சித்தியடையாத சந்தர்ப்பமும் ஏற்பட்டிருக்கின்றது. ஆரம்பிக்காவிட்டாலும் அனைத்து மாணவர்கள் சித்தியடைய மாட்டார்கள் எனவே இந்த அனுமதி வழங்கப்படுவதில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என்பதனை நாங்கள் கண்டுகொண்டுள்ளோம்.
எனவேதான் இந்த பாடசாலைக்கு உயர்தர அனுமதி தருவதாக இருந்தால் அதிபர் பகிரங்கமாக அனைத்து மாணவர்களையும் சித்தியடைய வைப்பேன் என்ற வாங்குறுதியை பகிரங்கமாக இந்த சபையிலே தெரிவிக்கவேண்டும் என தெரிவித்தார் இதற்கு அதிபர் வாக்குறுதியளித்ததை தொடர்ந்து தும்பங்கேணி கண்ணகி வித்தியாலத்திற்கு உயர்தர அனுமதி வழங்கபபடும் என மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.
இப்பிரதேசத்தின் மிக முக்கியமானவர்களை கல்வித்துறையில் சாதித்தவர்களை சமூதாயரீதியாக சதித்தவர்கள் அத்தனைபேரையும் எடுத்துக் கொண்டால் கிராமப்புறத்தில் இருந்து மிகவும் கஸ்ரப்பட்டு அந்த நிலையை அடைந்தவர்களாகத்தான் இந்த பிரதேசத்தை சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். எனவே தலைவர்களும் கல்வியாளர்களும் கிராப்புறத்தில் பிறக்கின்றார்களே தவிர நகரப்புறத்தில் பிறக்கவில்லை எனவே நீங்கள் எதிர்காலத்தில் நீங்கள் சாதிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்