கல்முனை தமிழர் போராட்டம்!!
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் நடாத்தி வரும் போராட்டம் நாளை (13) திங்கட்கிழமை ஐம்பது நாட்களை எட்டுகிறது.
அதையொட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பாரியமனித பேரணி கல்முனை நகரில் இடம்பெற்றது.
பொலிசார் பாதுகாப்பு வழங்கினர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
ஊர்வலம் ஊர்வலமாக சுமார் 4000 பொதுமக்கள் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால்
கல்முனை தமிழர் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இன்று (12) ஞாயிற்றுக்கிழமை 49 வது நாளாக அப் போராட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.
இன்று சுமார் 4000 பொது மக்கள் பங்கேற்ற பேரணி வடக்கு பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து தரவைப் பிள்ளையார் ஆலயம் வரை சென்று மீண்டும் பிரதேச செயலகமனத்தை அடைந்தனர்.மிக நீண்ட நேரம் மக்கள் கோஷங்களை எழுப்பி பதாதைகளை தாங்கிய வண்ணம் வலம் வந்தனர்.
சுட்டெரிக்கும் வெயிலில் நடைபவனியாக வந்து பெருமளவான பொதுமக்கள் பங்கேற்பது தொடர்கிறது.
சுட்டெரிக்கும் வெயிலிலும் கொதிக்கும் தார் வீதியில் தமது யதார்த்தங்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றிய கோரிக்கைகள் தாங்கிய பதாதைகளுடன் நடைபவனியாக சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வந்து கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் முன்பாக அமர்ந்திருந்து மக்கள்போராட்டத்தில் கலந்துகொண்டமை ஏனைய மக்களையும் உணர்ச்சி வசப்படுத்திய து.