5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்த நிலையில், புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து பரீட்சார்த்திகளுக்கும், முதலாவது வினாப்பத்திரத்தின் 13ஆவது வினாவுக்கான புள்ளி வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த வினாவுக்கான தமிழ் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக குறித்த கேள்விக்கு அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் புள்ளிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரமளவில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பரீட்சைகள் பிரதி ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நாளை ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.