அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்;டத்தின் கீழ் ஆசிரியர் விடுதி கட்டடதிறப்பு விழா
அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டத்தின் கீழ்இ நாட்டிலுள்ள 250 பாடசாலைகளில் புதிய திட்டங்கள் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தின் பொருட்டு கையளிக்கும் நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள காயான்மடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நிர்மானிக்கப்பட்ட ஆசிரியர் விடுதிக் கட்டிடம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் பிறேமலதா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் மண்முனை மேமற்கு பிரதேச சபை உறுப்பினர் நாகலிங்கம் மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகள் போன்றோர் கலந்துகொண்டு மேற்படி கட்டிடத்தினை திறந்துவைத்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கல்விவலயங்களில் ஒன்றாக காணப்படும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் ஏறக்குறைய 159 அசிரியர்கள் இவ் வலயத்திற்கு தேவைப்படுகின்றனர் அதேபோன்று குடிநீர் பிரச்சனை கட்டிடங்கள் தேவைப்பாடு தளபாடங்கள் பற்றாக்குறை இவ்வாறு பல பிரச்சனைகள் உள்ளது என வலயக்கல்விப் பணிப்பாளர் சுட்டிக் காட்டினார்.
எதிர்வரும் காலங்களில் கம்பரலிய திட்டத்தின் மூலம் இக்குறைபாடுகளில் சிலவற்றை நிவர்த்தி செய்து தருவதாகவும்இ வலயக்கல்வி அலுவலகத்திற்கு ஒரு கட்டிடத்தினை அமைத்தருவதாகவும் இங்கு வருகைதந்த ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான கணேசமூர்த்தி தெரிவித்தார்.