யாழ்ப்பாணத்தில் நூலகம் எரிக்கப்பட்டமை உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளே, தமிழர்களுக்கு அவர்கள் மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியிலேயே இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக மக்கள் அச்சத்துக்கு மத்தியில் வாழும் நிலை ஏற்பட்டது.
ஆனால் எதிர்வரும் காலத்தில் அவ்வாறான நிலை நாட்டில் ஏற்பட விடமாட்டோம். சிங்களவர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து இன மக்களும் தங்களது வழிபாட்டுத் தலங்களில் அச்சமின்றி வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவோம்.