கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் நான்கு குளங்கள் புணரமைப்புக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள நான்கு குளங்கள் புணரமைப்புக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கமநல அமைப்புக்களின் தலைவர்கள் தலைமையில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் ஊடாக பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளரும் தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவரும் பிரதேச செயலகங்களின் இணைத் தலைவருமான சோ.கணேசமூர்த்தி அவர்களின் நிதி ஒதுகீட்டின் மூலம் முனைத்தீவு மீனாட்சி குளம்,பழுகாமம் வட்டிக்குளம்,விவேகானந்தபுரம் தாமரைக்குளம்,வெல்லாவெளி பன்குளம் ஆகிய நான்கு குளங்களுக்கும் தலா மூன்று மில்லியன் ரூபா(3.00) செலவில் மொத்தமாக 12 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிகழ்வினை சிறப்பிற்கும் முகமாக பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளரும் தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவரும் பிரதேச செயலகங்களின் இணைத் தலைவருமான சோ.கணேசமூர்த்தி மற்றும் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி கமலநல அமைப்புக்களின் உறுப்பினர்கள்,கிராமசேவை உத்தியோகத்தர்கள்,ஆலய உறுப்பினர்கள்,பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related posts