ஜனாதிபதி விருதுச்சான்றிதழ் பெற்ற சிரேஸ்ட ஊடகவியலாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா.

இலங்கையின் முதலாவது ஜனாதிபதி ஊடகவிருதுக்காகக் தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் எமது சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா சிறப்புச்சான்றிதழைப் பெற்றார்.

 
தமிழ்மொழிமூல செய்திப்பத்திரிகைத்துறையில் அறிக்கையிடலுக்கான சிறந்த செய்தியாளர் என்றபிரிவிற்குள் இவர் தெரிவுசெய்யப்படடுள்ளார்.
இந்நிகழ்வு (23) வெள்ளிக்கிழமை கொழும்பு ஊடகஅமைச்சில் நடைபெற்றது.
ஊடகஅமைச்சரின் செயலாளர் சுனில்சமரவீர சான்றிதழ்களை 2018ஆம்ஆண்டுக்கான ஜனாதிபதிஊடக விருதுக்காக நியமனம்செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்களுக்கு வழங்கி வைக்கவுள்ளார்.
 
இவ் விழாவில் காரைதீவைச்சேர்ந்த எமது   சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா  2018ஆம் ஆண்டின் அதிசிறந்த செய்தியாளர் விருதைப்பெற்றுள்ளார்.
 
இலங்கை வரலாற்றில் முதற்றடவையாக நடைபெற்ற முதல் ஜனாதிபதி ஊடகவிருதுவிழாவில் தமிழ்மொழிமூலபத்திரிகைத்துறையில் சிறந்த பிராந்தியப்பத்திரிகையாளர் என்றவிருதைப்பெற்ற வடக்கு கிழக்கைச்சேர்ந்த ஒரேயொரு தமிழர் இவராவார்.
 
2018ஆம் ஆண்டுக்கான அரச உயர் விருதான ஜனாதிபதி ஊடக  விருதுச்சான்றிதழைப்பெற்ற காரைதீவைச் சிரேஷ்ட ஊடகவியலாளர் வேலுப்பிள்ளை தம்பிராஜா சகாதேவராஜா (வி.ரி.சகாதேவராஜா) 1964ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் திகதி முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்தா அடிகளார் பிறந்த காரைதீவில் பிறந்தவர். 
 
ஆரம்பக்கல்வியை காரைதீவு இ.கி.மி.ஆண்கள் பாடசாலை விபுலாநந்த மத்தியகல்லூரியில் பயின்று மட். கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலயத்தில் உயர்படிப்பை மேற்கொண்டார்.
 
ஆசிரியர்துறையில் இணைந்து விஞ்ஞான பயிற்றப்பட்ட ஆசிரியராகி பின்னர் பேராதனை பல்கலைக்கழககலைப்பட்டதாரியானார். பட்டப்பின்கல்வி டிப்ளோமாவில் மெரிட் சித்தியுடன் தேர்வாகியதால் கல்விமுதுமாணி பயிற்சிக்குத்தெரிவானார். கொழும்பில் கல்விமுதுமாணியைப்பயின்று 2007இல் கல்விமுதுமாணிப்பட்டம் பெற்றார். 
ஆசிரியராக விபுலாநந்த மத்தியகல்லூரியில் 10வருடங்களும் பின்னர் 22வருடங்களாக சம்மாந்துறைவலயக்கல்விப்பணிமனையில் உதவிக்கல்விப்பணிப்பாளராக பணியாற்றிவருகிறார். இவர் ஒரு சமாதான நீதிவானுமாவார்.  
 
இவர்  2007இல் மக்கள்சேவை ஊடகவிருது என்ற தேசியவிருதை கொழும்பு ஹோல்பேஸ் கோட்டலில் பெற்றார். சிறந்த பத்திரிகையாளருக்கான தேசிய விருதை வென்ற முதல் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமை இவரையே சாரும்.தற்போது வடக்குகிழக்கில் முதலாவது ஜனாதிபதி விருதுக்ககு தெரிவிhனவர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.
 2008இல் அனர்த்தமுகாமைத்துவ விழாவில் இரத்தினபுரியில்வைத்து ‘சிறப்புஊடகவியலாளர் விருது’ மற்றும்  ‘சாமஸ்ரீ தேசமான்ய ‘விருது ‘வித்யகலா’ விருது ‘விபுல ஸ்ரீ’ விருது ‘விபுலமாமணி’ விருது 2007.2008களில் இருதடவைகளில் ‘திகாமடுல்ல அபிமானி’ விருது ‘வித்யசாஹித்யன்’ விருது 2008 சாஹித்யவிழாவில் ‘வாழ்நாள்சாதனையாளர்’விருது போன்ற பல விருதுகளைப்பெற்றுள்ளார்.
இவர் இத்தாலி பாங்கொக் சிங்கப்பூர் மலேசியா பங்களாதேஸ் போன்றநாடுகளுக்கு அனர்த்தமுகாமைத்துவம் ஊடகம் ஆசிரியதொழிற்சங்க புலமைப்பரிசில்பெற்று சென்றுவந்துள்ளார்.
 
இவர் 37 வருடங்களாக எழுத்தாளராக  ஊடகவியலாளராக  நேர்முகவர்ணணையாளராக  ஒலிபரப்பாளராக  மேடைப்பேச்சாளராக விமர்சகராக  நிகழ்ச்சித்தொகுப்பாளராக தொழிற்சங்கவாதியாக பல ஆளுமைகளுடன் சமுகத்தில் உலாவருகிறார். 
ஊடகத்துறையில் 1986இல் வீரகேசரியில் காரைதீவு நிருபராக சேர்ந்ததனூடாக  ஊடகத்துறையில் பிரவேசித்தார்.
அவர் வீரகேசரி தினகரன் டெயிலிநியுஸ் தினக்குரல் சுடர்ஒளி சரிநிகர் விடிவெள்ளிமெட்ரோநியுஸ் போன்ற தேசியபத்திரிகைளிலும் தினக்கதிர் ஈழநாதம் உதயன் காலைக்கதிர் போன்ற பிராந்தியபத்திரிகைகளிலும் நிறைய ஆக்கங்களை எழுதிவந்தவர்.
 
தமிழ்வின் சுபீட்சம் உள்ளிட்ட வெளிநாட்டு உள்நாட்டு இணையத்தளங்களில் தொடர்ந்து எழுதிவருபவர்.
எண்ணற்ற செய்திகளை கடந்த 33வருடகாலவரலாற்றில் எழுதியஅவர் பல நூற்றுக்கணக்கான கனதியான கட்டுரைகளை இதுவரை எழுதியுள்ளார். கல்வி கலாசார அரசியல் சமுக சமய விழாக்கள் பண்டிகைகள் விரதங்கள் ரீதியிலான கட்டுரைகளை அவ்வப்போது அடிக்கடி எழுதிவருபவராவார்.
இலங்கைஒலிபரப்புக்கூட்டுத்தாபன கிழக்குப்பிராந்தியச்செய்தியாளராக 1989இல் சேர்ந்தார். அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக செய்திகளை வழங்கிவருகிறார். அத்துடன் வானொலியில் காலையில் ஒலிபரப்பாகும் சமகால செய்திகளைக்கூறும்  ‘விடியும்வேளை’ நிகழ்ச்சியில் கிழக்குப்பிராந்தியச்செய்திகளை தனது கணீரென்றகுரலில் நேரடியாக வழங்கிவருகின்றவர்.
 
மற்றும் இலக்கியப் பணியில் ஈடுபட்டு கட்டுரை விமர்சனம் நேர்காணல் உள்ளீட்ட பல்வேறு படைப்புக்களையும் சமூக மேம்பாட்டுக்காக எழுதி வெளியிட்டு வருகின்றார்.
 
‘ஊழியில்ஆழி’ என்ற சுனாமிவரலாற்று நூலை 2005இல் வெளியிட்டிருந்தார். மட்டு.ஆசிரியர்கலாசாலையின்’ கலைச்செல்வி சஞ்சிகையின் பிரதமஆசிரியராக பணியாற்றி அதனைவெளியிட்டிருந்தார்.சுவாமி விபுலாநந்தர் நினைவான அடிகளார் நினைவாலயமலர் எனும் நூலையும் சுவாமி நடராஜானந்தரின் ‘சேவையின்சிகரம்’ எனும் நூலையும் தொகுத்துவெளியிட்டிருந்தார்.
 
இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கத்தலைவராக அம்பாறை மாவட்ட சர்வசமயசம்மேளனசெயலாளராக காரைதீவு சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றத்தலைவராக  அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்சங்கத்தலைவராக  இந்துசமயவிருத்திச்சங்கத்தலைவராக வைத்தியசாலைஅபிவிருத்திக்குழுவின் உபசெயலாளராக விபுலாநந்தா பாடசாலைஅபிவிருத்திச்சங்கச்செயலாளராக  பழையமாணவர்மான்றச்செயலாளராக  அம்பாறை மாவட்ட தமிழர்மகாசங்க உபசெயலாளராக சேவையாற்றியவராவார். தற்போதும் பல அமைப்புகளில் முக்கியவகிபாகங்களில் சேவையாற்றிவருகிறார்.
 
இவர் ஆசிரியை நேசரஞ்சினியைக் கரம்பிடித்து மைத்ரி யனோஜ் டிவானுஜா ஆகிய மூன்று பிள்ளைகளைப்பெற்றுள்ளார். காலஞ்சென்ற ஓய்வுநிலை அதிபர் வே.தம்பிராஜா தங்கநாயகம் தம்பதிகளின்  08பிள்ளைகளில் கடைக்குட்டியாவார். முன்னாள் சிவானந்த வித்தயாலய அதிபர் கல்விமான் கை.கணபதிப்பிள்ளை அவர்களின் மருமகனாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts